புது டெல்லி: குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த எடப்பாடி தலைமையிலான அஇஅதிமுக அரசை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அஇஅதிமுக ஆதரித்ததற்காக கூறப்படும் காரணம் கவலைக்குரியது, கேலிக்குரியது ஆகும். மேலும் இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு எனக் பதிவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை ஆதரித்ததற்கு அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறியுள்ள காரணம் கவலைக்குரியது, கேலிக்குரியது. தலமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு எனப் பதிவிட்டுள்ளார்.


 



மற்றொரு பதிவில், இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள' என்ற கேள்விக்கு என்ன பதில்? இலங்கைத் தமிழர்கள் என்றல்லவா அவர்களைப் பார்க்க வேண்டும்? அவர்களில் பெரும்பான்மையானவர் இத்துக்கள் என்பதை அரசு மறந்துவிட்டதா? எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.


 



குடியுரிமை திருத்த மாசோதா மூலம், மத்திய அரசு தனது இந்துத்துவா கொள்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவே முயல்கிறது என குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் மத்திய அரசையும் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. 


அந்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்களை, மாநிலங்களவை நிராகரித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை. 


இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசு, நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றி உள்ளது. 


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.