ஈரோடு காங்கிரஸ் வெற்றி டெல்லிக்கு கேட்கனும்: ப.சிதம்பரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி டெல்லிக்கு கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் கொடுக்கும் வெற்றி டெல்லிக்கு கேட்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியின் கழுத்தை பாஜக என்னும் நச்சுப்பாம்பு சுற்றியுள்ளது.
மேலும் படிக்க | பணம் கொடுப்பதால் வந்திருப்பார்! கமல் பற்றி பேசிய செல்லூர் ராஜூ!
பாஜக ஆளும் மாநிலங்களில் வாழும் மக்களின் நிலையை உயர்த்த பாருங்கள். எங்கள் மாநிலத்தை குறை கூறிக்கொண்டு இருக்காதீர்கள். தேர்தல் அறிக்கையை ஒரு நாளில் நிறைவேற்ற முடியாது. ஐந்து ஆண்டு ஆட்சி வாக்களித்து விட்டு ஒரே நாளில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மூன்றாம் தர பேச்சாளர் போல் பேசக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் 4182 மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நான் பெண்ணாக பிறந்து நகர பேருந்தில் இலவசமாக போக முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது.
கவர்னர் 19 மசோதாக்களை நிறைவேற்ற கையெழுத்திட மறுக்கிறார். இதை மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்தார். இதே போன்று எடப்பாடி பழனிச்சாமியும் கவர்னர் செய்தது தவறு என்று சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பொருளாதார நிபுணர்கள் சொல்வதையும், சர்வதேச நிதியம் சொல்வதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்வதில்லை. பெரியார், காமராஜர், அண்ணா வழியில் வந்தவர்கள் அதிமுகவின் வாலை இந்த தேர்தலில் வெட்டி விடுவோம் என பேசினார்.
மேலும் படிக்க | கே.பி முனுசாமி பணம் கேட்டது உண்மை தான் - டைம் பார்த்து அடித்த ராஜேந்திர பாலாஜி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ