பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பியதும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி கடந்த புதன்கிழமை பழனி கோவில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது பழனி கோவிலில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் பணிபுரியும்  பாக்கியலட்சுமி(44) என்ற ஊழியர் ஒருவர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அப்போது காலில் ரப்பர்பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாக அவர் திருடியுள்ளார். இதை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதுதொடர்பாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பாக்கியலட்சுமியை கோவில் ஊழியர்கள் சோதனையிட்டதில் காலில் நகையை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாக்கியலட்சுமி மீது அடிவாரம் காவல் நிலையத்தில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பாக்கியலட்சுமியைக் கைது செய்து நிலக்கோட்டை  சிறையில் அடைத்தனர்.



உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது கோவில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள்  மேற்பார்வையில், சிசிடிவி காமிரா கண்காணிப்பில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று முறை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் ஊழியர் ஒருவர் 90ஆயிரம் ரூபாய் திருடியதும், கடந்த மாதம் தங்கத்தினால் ஆன வேல் ஒன்றை துப்புரவுப் பணியாளர் கணேசன் என்பவர் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டனர்.


மேலும் படிக்க | 5 கிலோ பிட் பேப்பர் பிடிபட்ட விவகாரம் - 11 தேர்வறை கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட்



இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பெண் ஒருவர் திருடி அகப்பட்டு சிறைக்கு சென்றுள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி சரியாக நடைபெறுகிறதா? என்ற சந்தேகம் தற்போது பக்தர்களிடையே  எழுந்துள்ளது.


மேலும் படிக்க | 'நீட்' தேர்வு அச்சம் - திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR