முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பொறுப்பேற்றனர். முதல்வர் உள்ளிட்ட  தமிழக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர். பதவி பிரமாணம் முடிந்தவுடன் நேராக பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள்  முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம்  வைத்து  மரியாதை செலுத்தினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் இன்று அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


இதில் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் பதவி அப்படியே நீடிக்கின்றனர்.


* எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர்


* நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை


* செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை


* செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை


* தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு


* வேலுமணி - உள்ளாட்சி துறை


* ஜெயக்குமார் - மீன்வளத்துறை


* சண்முகம் - சட்டத்துறை


* அன்பழகன் - உயர்கல்வி


* சரோஜா - சமூக நலத்துறை


* சம்பத் - தொழில்துறை


* கருப்பண்ணன் - சுற்றுசூழல்


* காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்


* ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை


* உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு


* விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை


* துரைக்கண்ணு - விவசாயத்துறை


* கடம்பூர் ராஜூ- செய்தி துறை


* உதயகுமார் - வருவாய்த்துறை


* வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை


* வீரமணி - வணிக வரித்துறை


* ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை


* பெஞ்சமின் - ஊரக தொழில்துறை


* நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை


* எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை


* மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை


* ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை 


* அமைச்சர் பாஸ்கரன் - காதித்துறை


* சேவூர் ராமச்சந்திரன் - அறநிலையத்துறை


* வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை


* பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை


மொத்தம் 31 அமைச்சர்கள்.