திருப்பத்தூர்: நிரம்பி வழியும் ஏரி நீரை மற்றோரு ஏரிக்கு திருப்ப திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவை எதிர்த்து செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நாட்களாக தொடர்ந்து பெய்த வந்த கனமழையால் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பேரி பஞ்சாயத்தில் உள்ள பெரிய ஏரியில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. 


அப்படி வெளியேறும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு சென்று வீணாக கடலில் கலப்பதால், பெரிய ஏரியின் அருகே விஷமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து கால்வாய் மூலமாக நீரை திருப்பிவிட விஷமங்கலம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அமர குஷ்வாகாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 


பொது மக்களின் கோரிக்கையின் பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் கால்வாய் மூலமாக தண்ணீரை விஷமங்கலத்துக்கு திருப்பிவிட உத்தரவிட்டார்.


இதனையடுத்து இன்று பணிகள் தொடங்கிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குரும்பேரி கிராம மக்கள்  உபரி நீரை திருப்பிவிட சம்மதிக்க மாட்டோம் எனக்கூறி கால்வாயில் தண்ணீர் திருப்பி விடும் பணியை தடுத்து நிறுத்தினர். 


இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியர் பானு உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத குரும்பேரி கிராம பொதுமக்கள் தங்களுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் அவகாசம் வேண்டும் எனவும் ஊர் பொதுமக்கள் கூடி ஆலோசனை செய்து முடிவு தெரிவிப்பதாகவும் கூறினர். இதனால் இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 


இந்நிலையில் குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமர் என்பவர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இந்திரங்களை பணி செய்ய விடாமல் தடுத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் காவல்  துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR