ஓசூர் மலைக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா துவக்கம்
ஓசூர் மலைக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம். ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி காட்சி.
panguni uthiram Thiruther Festival : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்கதுமான மலைக்கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் அமைந்து உள்ளது.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருத்தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு திருத்தேர் திருவிழா வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று பங்குனி உத்திர திருவிழா உற்சவமானது கொடியேற்றத்துடன் துவங்கி உற்சவ மூர்த்திகளான அம்பாளும் சிவபெருமானும் மலையில் இருந்து கீழே இறங்கி ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் சன்னிதியில் எழுந்தது அருளினர்.
பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளிக்கவசம் சார்தப்பட்டு மற்றும் மலர், மாலைகளால் பிரம்மாண்ட அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள் பாலித்தனர். பாரம்பரிய மரபு வழி வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் முதல் நாள் உபசார பூஜைகள் நடைபெற்றன.
மேலும் படிக்க | திமுகவில் இணைந்த தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்கள்!
இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகளான அம்பாளும் சிவபெருமானும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகளுடன் உற்சவமூர்த்திகள் தேரடி வீதியில் வலம் வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் சிவசக்தி ஸ்வரூபமாய் காட்சி அளித்த அம்பாளும் சிவபெருமானையும் வணங்கி வழிபட்டனர். பின்னர் அன்னதானங்களும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் 25ஆம் தேதி பிரம்மாண்ட திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டும் இல்லாமல் கர்நாடகா ஆந்திரா உள்ளிட்டு அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதை ஒட்டி, இதற்கான விரிவான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பங்குனி உத்திரம் 2024:
இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவை கொண்டாட பக்தர்கள் தயாராகி வருகின்றனர். பல ஊர்களில் இந்த மாதத்தில் திருவிழா நடக்கும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் பக்தி சிரத்தையோடு விரதம் கடைபிடிக்கும் மாதமாக பங்குனி மாதம் அமைகிறது. அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மார்ச் 24ம் தேதி காலை 11.17 மணிக்கே பெளர்ணமி திதியும், காலை 08.46 மணிக்கே உத்திரம் நட்சத்திரமும் துவங்கி விடுகிறது. மார்ச் 25ம் தேதி பகல் 01.16 வரை பெளர்ணமி திதியும், காலை 11.19 வரை உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. அந்த வகையில் மார்ச் 25ம் தேதி சூரிய உதய நேரத்தின் போது தான் பெளர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் உள்ளன. இதனால் மார்ச் 25ம் தேதியை தான் பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு பக்தர்கள் விரதம் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் இருந்தது குறித்து புகார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ