பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 பிரிவு 3(1) (zx) பிரிவு 3(1) (zz) (iii) (v) (viii) & (xi) மற்றும் பிரிவு 26(1) (2) (i)(ii) & (v)-ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?


எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம் புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை மெரினா பீச்சிலும் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவற்றை பறிமுதல் செய்து ஆய்விற்கும் அனுப்பி வைத்திருந்தனர்.  இந்நிலையில் தற்போது அதிலும் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பஞ்சுமிட்டாய்கள் அன்றாடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக குழந்தைகளை டார்கெட் செய்து பஞ்சுமிட்டாய் விற்கப்படுகிறது. குழந்தைகளை கவருவதற்காக அதில் அதிக ரசாயனங்கள் சேர்ப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் வட இந்தியர்கள் இதனை விற்று வருகின்றனர். மேலும் திருவிழாக்களிலும், திருமணங்களிலும் நாம் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்வதை பார்த்திருப்போம். குழந்தைகள் மட்டும் இன்றி பெரியவர்களும் இதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.  பல ஆண்டுகளாக நாம் சாப்பிட்டு வரும் பஞ்சு மிட்டாயிலும் இப்படி கலப்படம் இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ