தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு!
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவியேற்றார்!
கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ஆம் தேதி தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்தது.
இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தின் கவர்னராக பணியாற்றி வரும் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் பதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இன்று ஆளிநர் மாளிகையில் நடைப்பெற்ற விழாவில் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முக ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.