விசாகப்பட்டினம் டூ கம்பம் கொரியரில் வந்த கஞ்சா பார்சல்
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடைபெற்று. ஒரு காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இடையே கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடைபெற்று. ஒரு காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இடையே கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருந்து கம்பம் பகுதிக்கு கஞ்சாவை கடத்தி வந்து அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் (Neighbouring State Kerala) விற்பனைக்காக இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரிகள் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கடத்தி வந்தனர்.
இதனை தடுப்பதற்காக தேனி மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கஞ்சா கடத்துபவர்களையும் பதுக்கி வைத்து விற்பனை விற்பனை செய்பவர்களையும் தீவிரமாக கண்காணித்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல், விற்பனையை தடுக்க எஸ்.பி. பிரவீன்உமேஷ்டோங்ரே உத்தரவின் பேரில் எஸ்ஐ. விஜயானந்த் தலைமையில் 4 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
READ ALSO | இனி கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமானது!
இந்நிலையில் கொரியர் பார்சல் மூலம் கஞ்சா கடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து தனிப்படையினர் தேனி நகர் முழுவதும் ஆய்வு செய்தனர். அதில் திட்டச்சாலையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஒருவருக்கு விசாகப்பட்டிணத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பார்சலை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அந்த பார்சலில், 2 அட்டைப் பெட்டிகளில் 22 கிலோ எடையில் 10 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
அதனை பறிமுதல் செய்த தனிப்படையினர் பார்சலில் இருந்து அலைபேசி எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி தலைமையில் தேனி எஸ். பி., பிரவின் உமேஷ் டோங்ரே முன்னிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பார்சல் மற்றும் கூரியர் நிறுவன மேலாளர்கள், உரிமையாளர்களுடன் நடந்த கூட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை பார்சல்கள் மூலம் கடத்தலை தடுக்கும் பொருட்டு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரிகள், பொதுப் போக்குவரத்து களில் கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் புதிய உத்தியாக பார்சல் மற்றும் கொரியர் நிறுவனங்கள் மூலம் கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ALSO READ | Antarctica: உலகிற்கே ஆச்சுறுத்தலாக உருவெடுக்கும் பனிப்பாறை விரிசல்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR