MPs Suspended: மக்களவையில் இருந்து திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் மேலும் 9 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் நேற்று (டிச. 13) ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமளியில் ஈடுபட்டதாக கூறி வி.கே.ஸ்ரீகண்டன், பென்னி பெஹனன், முகமது ஜாவேத், பி.ஆர். நடராஜன், கனிமொழி, கே. சுப்பராயன், எஸ்.ஆர். பார்த்திபன், எஸ் வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகிய 9 பேரும்,   ஆகிய மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்கள் டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.


ஏற்கனவே, டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 10 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், மொத்தம் 15 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | சினிமாவை மிஞ்சிய கொடூர சைக்கோ! 7 பெண்கள் கொலை..! தோண்டத்தோண்ட சடலங்கள்!


சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்களில், ஒன்பது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். 2 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் சி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர். இரண்டு பேர் திமுகவை சேர்ந்தவர்கள் ஆவார்.


இதில் மக்களவையில் இருந்து இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேசிய திமுகவை சேர்ந்த தூத்துக்குடி எம்பி கனிமொழி, "நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டவர்கள் உள்ளே வருவதற்கான பாஸ்களை உண்மையில் வழங்கிய எம்பி ஒருவர் இருக்கிறார். அந்த எம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம் நாங்கள் மஹுவா தொடர்பான விஷயத்திலும் என்ன நடந்தது என்று பார்த்தேன். 


விசாரணை கூட முழுமையடையாமல், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த எம்.பி.யை சஸ்பெண்ட் கூட செய்யவில்லை. அவர் எங்களுடன் நாடாளுமன்றத்திலேயே இருக்கிறார். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரதமரும், உள்துறை அமைச்சரும் வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்கிறார்கள். முதலில் ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்துவிட்டு இப்போது ஒன்பது பேரை சஸ்பெண்ட் செய்தார்கள். அப்படியானால் இது எப்படி ஜனநாயகம்?" என்றார்.


மேலும் படிக்க | நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்; உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ