பஸ் கட்டண உயர்வு: எதிர்ப்பு தெரிவிக்கும் பயணிகள்!
தமிழக அரசு கட்டண உயர்வை அறிவித்த பின்னர் சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்து கட்டணங்களை கண்டித்து மக்கள் எதிர்ப்பு.
தமிழக அரசு போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சிக்கு சாதாரண பேருந்தில் கட்டணம் இதுவரை 175 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 265 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லைக்கு 325 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 460 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் சாதாரணப் பேருந்துகளின் கட்டணம் தற்போது 380 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டீலக்ஸ் பேருந்துகளில் திருச்சிக்கு செல்லும் கட்டணங்கள் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், மதுரைக்கான கட்டணம் 330 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லைக்கான கட்டணம் 540 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 430 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
போக்குவரத்து பஸ் கட்டண உயர்வு குறித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.