Puducherry Elections 2021: சட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடவில்லை; வேட்புமனுக்கள் வாபஸ்
Puducherry Assembly Elections 2021: புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம். 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் (Puducherry Elections 2021) இருந்து பாட்டாளி மக்கள் கட்சி (PMK) விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
Puducherry Assembly Elections 2021: புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம். 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் (Puducherry Elections 2021) இருந்து பாட்டாளி மக்கள் கட்சி (PMK) விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் தாங்கள் போட்டியிட்ட 10 தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது.
புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடப்போவதாக பாமக ஏற்கனவே அறிவித்திருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக பாமக போட்டியிடும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், எந்தவொரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்படாததால், புதுச்சேரி தேர்தலில் தனித்து போட்டு என பாமக அறிவித்தது.
இதையடுத்து 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட பாமக முடிவு செய்தது. அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கலும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் திடீர் திருப்பமாக, இன்று 10 தொகுதிகளில் இருந்து பாமக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இது புதுச்சேரி அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.