திருவண்ணாமலையில் கிரிவலம்: தொடர்ந்து 19வது மாதமாக நீடிக்கும்தடை!!
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு அந்த தடையை கடந்த 15ஆம் தேதி முதல் நீக்கியது.
எனினும் திருவண்ணாமலையில் வரும் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை, அதாவது இன்று காலை 6 மணி முதல் 21ம் தேதி வியாழக்கிழமை இரவு 12 மணி வரை கிரிவலம் செய்ய தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவண்ணாமலையில் 19வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 250க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்னதாக, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பெளர்ணமி தினங்களான 19.10.2021 காலை 6 மணி முதல் 21.10.2021 இரவு 12 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என கேட்டுக் கொண்டார்.
ALSO READ | மதுரை AIIMS மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவு..!!
மேலும், "பக்தர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தின் தொற்று நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை எட்ட உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: AIADMK: ஜெயலலிதா சமாதியில் தியானம் கலைந்த சசிகலாவின் அஞ்சலி! நடந்தது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR