திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கடந்த 2007ஆம் ஆண்டு எல்என்டி  கப்பல் கட்டும் துறைமுக தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி பழவேற்காடு பகுதி மீனவர்கள் எல்.என்.டி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்போதே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மீனவ பிரதிநிதிகள், எல்என்டி நிர்வாகம், அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முக்கியமான ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த தமிழக மீனவர்கள்! தொழில்போட்டியால் குறையும் மீனவர்களின் ஒற்றுமை!


அதாவது, துறைமுகத்தை அமைத்துக்கொள்ளலாம் ; ஆனால், ஆயிரத்து 750 மீனவ குடும்பங்கள் உள்ள நிலையில், வீட்டில் ஒருவருக்கு துறைமுகத்தில் வேலைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்பின் எல்.என்.டி துறைமுகத்தில் முதற்கட்டமாக 250 பேருக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டன. அதற்கு மேல் ஊழியர்களையும் சேர்க்கவில்லை, பணியமர்த்தப்பட்ட ஊழியர்களையும் நிரந்தரமாக்கவில்லை என்று மீனவர்கள் புலம்புகின்றனர். 


கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேலாகியும் ஊதிய உயர்வு அளிக்காமல் அதே சம்பளத்துடன் பணிபுரிந்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் இல்லை என்று பழவேற்காடு மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, அரசின் கவனத்திற்கு கொண்டு  சென்றும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்கக்கோரி நேற்று  எல்என்டி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் 2-வது நாளாக இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பழவேற்காடு பகுதி மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடியேற்றி கடல் மார்க்கமாக படகுகள் மூலம் சென்று எல்.என்.டி கப்பல் கட்டும் துறைமுக தளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பழவேற்காடு பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR