சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.  நேற்று இரவு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மயிலாடுதுறை கடலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்து வருவதாகவும் நேற்றில் இருந்து பெய்த மழையின் காரணமாக சென்னையில் 220 இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் இதுவரை இதில் 34 இடங்களில் தண்ணீர் வெளியேற்றி இருப்பதாக தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ Rain Dance by snakes! இது தமிழ்நாடு பாம்புகளின் உல்லாச மழை நடனம்!


மேலும் 127 பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர்  வெளியேற்றப்பட்டு வருவதாகவும் , 46 பொக்லைன் மூலம் மண் எடுக்கப்பட்டு  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும்,  நேற்று பெய்த மழையில் ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை அதிகமாக பெய்து இருக்கிறது என்றும் ,தேசிய பேரிடர் மீட்பு துறை செங்கல்பட்டிலில் இரண்டு குழுக்கள் மற்றும்  காஞ்சிபுரத்தில் இரண்டு குழுக்களும் உள்ளனர். திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை தூத்துக்குடி அரியலூர் பெரம்பலூர் திண்டுக்கல் ராணிப்பேட்டை திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களில் 124 முகாம்களில் 11329 நபர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.


தற்போது பெய்த மழையினால்  பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதால் பயிர் சேதங்களை மீண்டும் கணக்கு எடுக்க சொல்லி இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர் நேற்றைய தினம் மட்டும் மழையினால்  3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை தமிழகத்தில்  344 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 2205 குடிசைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதேபோன்று  273 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.


ALSO READ லாரியையும் முந்திரியையும் கடத்தியவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தமிழக போலீஸ் Hats Off


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR