பொங்கல் பண்டிகையின் துவக்க நாளான இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பார்கள். பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துகின்றனர்.


சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அதிகாலை முதலே தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் சாலையோரம் குவித்து எரித்ததால் கடும் புகை மூட்டம் எழுந்தது. இதன் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு பனிப்புகை சூழ்ந்தது. 


 



 


இந்நிலையில் பழையன கழிதலும்.. புதியன புகுதலுமான போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


 



 


 


சென்னையில் மக்கள் பழைய பொருட்கள், பாய், பழைய துணிகள் போன்றவைகளை எரித்தும்,சிறுவர்கள் மேளம் அடித்தும் போகி பண்டிகையை கொண்டாடினர். இதனால் பல பகுதிகளில் மார்கழி பனியை விரட்டும் அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது.


சென்னை முழுவதும் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் காணப்பட்டது இதனால்  வாகன ஓட்டிகள் அவதிபட்டனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது