இன்று முதல் கோக், பெப்சி-க்கு பாய்! பாய்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று முதல் தமிழகம் முழுவதும் கோக், பெப்சி குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக இன்று முதல் தமிழகம் முழுவதும் கோக், பெப்சி குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 1-ம் தேதி முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்து இருந்தது.
இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில், பீட்டாவை தடை செய், ஜல்லிக்கட்டு வேண்டும் என பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றின் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றப்பட்டு முதல் வெற்றியை போராட்டத்தின் மூலம் தமிழகம் அடைந்தது. அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு குளிர்பானங்கள் மார்ச் 1 முதல் விற்க மாட்டோம் என வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை தடுத்து 2-வது வெற்றி பெற்றது.