பேரறிவாளன் விடுதலை: முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்-SC
பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழகில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு (Tamil Nadu Government) பரிந்துரைத்தது. இது குறித்த முடிவை தமிழக ஆளுநர் இன்னும் எடுக்காமல் உள்ளார்.
தனது விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநர் அதிக காலம் எடுத்துக்கொள்வதாகவும், இதனால், இது குறித்த முடிவை உச்சநீதிமன்றமே எடுக்க வேண்டும் என்றும் பேரறிவாளன் (Perarivalan) வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் போது, பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடினார்.
இந்த நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க 2018-ம் ஆண்டு செப்டம்பரில் முடிவெடுத்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறினர். 7 பேரை விடுவிப்பதில் கவர்னருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் இன்னும் 3 நாட்களில் முடிவு எடுப்பார்” என்று வாதாடினார்.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) இன்று நடைபெற்ற விசாரணையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ALSO READ: Centre: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்
முன்னதாக, பேரறிவாளனின் விடுதலை பற்றிய மாநில அரசின் 2018 பரிந்துரை குறித்து தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் (Banwarilal Purohit) மூன்று - நான்கு நாட்களில் முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
எம்.டி.எம்.ஏ விசாரணை முடியும் வரை இந்த வழக்கில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளனால் முன்வைக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ். அப்துல் நசீர் மற்றும் இந்தூ மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விஷயம் நான்கு வாரங்களுக்குப் பிறகு விசாரிக்கப்படும் என கூறியது.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ஏ.எஸ்.ஜி கே.எம். நடராஜ் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்காக ஆஜராகிறார் என்றாலும், இந்த விவகாரத்தில் மூன்று நான்கு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்க அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன என்று கூறினார்.
இந்த விவகாரத்தை ஆளுநர் தீர்மானிப்பது நல்லது என்றும், முன்னரே முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அது நீதிமன்றத்தின் நேரத்தையும் முயற்சிகளையும் மிச்சப்படுத்தி இருக்கும் என பெஞ்ச் கூறியது.
இவ்வளவு தாமதமாக நீதிமன்றத்தை அணுகியதற்கு மேத்தா வருத்தம் தெரிவித்தார்.
ALSO READ: சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR