Supreme Court: அமைச்சர்கள் குழு ஒரு முடிவு எடுத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும். மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தனது கருத்தை முன்வைத்துள்ளது.
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.
நாளை கலைவாணர் அரங்கில் தொடங்கும் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாதவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக இன்று தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியதோடு, பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆளுநரிடம் பேசியதாகத் தெரிகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிகளின் கூட்டம் திமுக கட்சி தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏக்கள அனைவரும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலினை தங்கள் சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.