ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐயால் பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவை சேர்ந்தவர் குயில்தாசன் அவரது மனைவி அற்புதம்மாள். இவர்களது மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ.யால் பேரறிவாளன் கடந்த 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 28 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளார். பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் முயற்சி செய்து வருகிறார். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.


இதைதொடர்ந்து பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளனின் அப்பாவின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருக்கிறது. அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை காண வேண்டும் என்பதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. 


தந்தை குயில்தாசன் உடல்நிலை மோசமடைந்திருப்பதால் பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் வழங்கவேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் தனது வீட்டுக்குச் செல்ல உள்ளார்.


கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2017 ஆம் ஆண்டு 2 மாதம் பரோல் வழங்கப்பட்டது.