நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறும். இதேபோல் இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. 


கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்


இந்நிலையில், காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் -100 க்கு போன் செய்த மர்ம நபர், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் தெப்பக்குளம் அருகே வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, கோவில் மற்றும் தெப்பகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. 


மேலும் படிக்க | தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?


வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்பதி


இந்நிலையில் தேரோட்டம் எவ்வித அசம்பாவிதம் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து கோவிலுக்கு மிரட்டல் விடுத்த  தொலைபேசி எண்ணை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். காவல்துறையின் விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலை சேர்ந்த சிங்காரவேலு (35) என்பது தெரிய வந்தது. 


சிறையில் அடைக்கப்பட்ட ஸ்பதி


இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, பேராவூரணி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னாள் கோவிலில் ஸ்தபதியாக வேலை செய்ததாகவும், தேரோட்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனல் மூலம் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த போது, குடிபோதையில் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு இருப்பதாக  உளறி விட்டதாக  கூறியுள்ளார். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ