பெரியார் என்பது வெறும் சிலை அல்ல அது ஒரு தத்துவம்: சத்யராஜ் viral video!
பெரியார் வெறும் சிலையாக மட்டும் வாழவில்லை எங்களை போன்றவர்களின் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 'ஹெச்.ராஜா வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசியுள்ளார். அவரைக் கைதுசெய்ய வேண்டும்' என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்த சர்ச்சை கருத்தை தொடர்ந்தது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை பாஜக அலுவலகம் மீது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர்.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ-வை பதிவிட்டுள்ளார்: அதில்அவர் கூறியுள்ளதாவது:-
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜாவின் கருத்துக்கு அவர் மன்னிப்பு கேக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு இது தொடர்பாக H. ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்றார்.
பெரியார் என்பது வெறும் சிலை மட்டும் அல்ல அது ஒரு தத்துவம் என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.
அவர் வெறும் சிலையாக மட்டும் வாழவில்லை எங்களை போன்றவர்களின் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எந்த சக்தியாலும் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்றார்.
நேரம் குறித்து தேதி குறித்தால் பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் சவாலை சந்திக்க தயார் என்றார்.