தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜாவின் கருத்துக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.


எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.


இந்நிலையில், பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச் ராஜா வெளியிட்ட கருத்துக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சூர்யா பிரகாசம் மனு தாக்கல் செய்தார். அவரது வழக்கு விசாரணையை பிற்பகல் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.