வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் கட்டி அடித்து உதைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை பாஜக நகரச் செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் கல் எறிந்து பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். மேலும் கோவையில் உள்ள தந்தை பெரியார் லைக்கும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.


 



 


போலீஸார் இந்த இருவரையும் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.