பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவோம்.சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
பெரியார் (Periyar) பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார்.
பெரியார் (Periyar) பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும். என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இன்று (செப்டம்பர்,6) நடைபெற்ற விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110-ன் கீழ் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அறிவிப்பை வெளியிட்ட பின்பு அவர் பேசியதாவது:
"சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி தமிழகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் பெரியார்.அவர் எழுதிய எழுத்துக்கள் யாரும் எழுத தயங்கியவை அவர் பேசிய பேச்சுக்கள் யாரும் பேச பயந்த வை. அவர் நடந்த நடை, நடத்திய சுற்றுப்பயணம், மாநாடுகள் குறித்து பேசுவதென்றால் தமிழக சட்டப்பேரவையை 10 நாட்கள் ஒத்தி வைத்துவிட்டு தான் பேச வேண்டும்.
ALSO READ : நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
"பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெரியார். இந்தியா முழுவதும் சமூக நீதிப் பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் குருகுலப் பயிற்சிதான் தி.மு.க (DMK) வை உருவாக்கியது.
"பெரியார் குறித்து இந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். அதன்படி பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் அறிவிக்கிறேன்.
" தமிழகத்தில் உள்ள தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாளான செப்டம்பர் 17 அன்று உறுதிமொழி எடுக்கப்படும்.
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்., யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் உயிர்மூச்சாக கொண்டு பணியாற்றுவோம்”
இந்த வரிகளை சமூகநீதி நாளில் அரசு உறுதிமொழியேற்க இருக்கிறது.
இவ்வாறு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.!
ALSO READ : ராசிபுரம் அருகே நித்தியானந்தா சீடர்களை அடித்து விரட்டிய பொது மக்கள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR