தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுமுடக்கம் என்பதால் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என அறிவிப்பு ..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடயே  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. ழுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது. ஆம்புலன்ஸ், பால், அவசர மருத்துவ சிகிச்சை வாகனங்களுக்கு மட்டும் நாளை (05/07/2020) பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும். வரும் திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும். நாளை (05/07/2020) முழு முடக்கம் கடைப்பிடிக்க உள்ளதையொட்டி தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


READ | நமது வீட்டிற்கு விருந்தினர்கள் வருகையில் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..!


தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.... "தமிழகத்தில் நாளை முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதால் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது. முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.


பால், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவ வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்படும். வரும் திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே  பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.