தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை; அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!
சென்னையில், இன்று பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18 என்ற அளவிற்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு என்ற அளவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். திங்கள்கிழமை காலை முதல் சென்னையில்,பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18 என்ற அளவிற்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு என்ற அளவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.90 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.00 ஆகவும் உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் போர் முடியும் வரை, இந்த விலை உயர்வு தொடரும் என்று நம்பப்படுகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.3.78 என்ற அளவிலும், டீசல் ரூ.3.90 என்ற அளவிலும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பெட்ரோலிய நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்தது
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்றைய சமீபத்திய கட்டணங்களை இப்படித் தெரிந்து கொள்ளலாம்
தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் (டீசல் பெட்ரோல் விலையை தினமும் சரிபார்ப்பது எப்படி). இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் ஆர்எஸ்பியை 9224992249 என்ற எண்ணுக்கும், பிபிசிஎல் நுகர்வோர்கள் ஆர்எஸ்பியை 9223112222 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம். அதே நேரத்தில், HPCL நுகர்வோர் HPPrice ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR