டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் புல்லட் பரிமளம். அதிரடியான செயல்பாட்டால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றபோது நீதிமன்றத்தை விமர்சித்து பிளக்ஸ் பேனர் வைத்தவர்.


அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்ட பின்னர் இவர் டிடிவி தினகரன் அணியில் இருந்து கட்சிப் பணியாற்றி வந்தார். 



சில நாட்களுக்கு முன்னர் பொதுக் கூட்டத்தில் முன்னாள் MLA மொளச்சூர் பெருமாளுக்கும், இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் இரடையே ஏற்பட்ட மோதலை அடுத்து புல்லட் பரிமளம் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.


இந்நிலையில் இன்று டிடிவி தினகரம் வீட்டிற்கு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளம், டிடிவி வீட்டில் குண்டு வீச வந்து எதிர்பாரா விதமாக அது அவரது காரிலேயே வெடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இச்சம்பவத்தில் டிடிவி தினகரன் அவர்களின் வாகன ஓட்டுநர் மற்றும் புகைப்படக்க கலைஞர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.