பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள், மார்ச் 22 அன்று அதிகரிக்க தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை திங்கள்கிழமை (ஏப்ரல் 4, 2022) லிட்டருக்கு தலா 40 காசுகள் உயர்த்தப்பட்டது, கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல் டீசல் விலைகள்  லிட்டருக்கு ரூ.8.40  என்ற அளவில் அதிகரித்துள்ளது. மார்ச் 22 அன்று  அதிகரிக்க தொடங்கிய பெட்ரோல் விலை, 12 வது முறையாக இன்றும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 


நாடு முழுவதும்  விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன மற்றும் உள்ளூர் வரிவிதிப்பு நிகழ்வுகளைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.


சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து 109 ரூபாய் 34 காசுக்கள் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு 38 காசுகள் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 42 காசு என நிவிற்பனை செய்ய்யப்படுகிறது. 


டெல்லியில்  பெட்ரோல்  விலை முன்னதாக லிட்டருக்கு ரூ.103.41  என்ற அளவில்  இருந்த நிலையில்,  தற்போது ரூ.103.81 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.67 என்ற அளவில் இருந்த நிலையில், ரூ.95.07  என்ர அளவிலும் அதிகரித்துள்ளது.


மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.118.83 மற்றும் ரூ.103.07  என்ற அளவில் உள்ளது.


மேலும் படிக்க | PNG விலை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்


ஸ்ரீநகர் முதல் கொச்சி வரையிலான அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் உள்ளது.  திருவனந்தபுரம், ஹைதராபாத், புவனேஸ்வர், ராய்ப்பூர் மற்றும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பல நகரங்களில் சதத்தை தாண்டியுள்ளது.


தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் டீசல் விலை நாட்டிலேயே மிக அதிக அளவாக உள்ளது, ராஜஸ்தானின் எல்லை நகரமான ஸ்ரீ கங்காநகரில் பெட்ரோல் விலை மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்தது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR