புரோ கபடி லீக்கின் தமிழ்நாட்டு தூதராகிறார் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புரோ கபடி லீக் வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த லீக் தொடருக்கான தமிழக தூதராக நடிகர் விஜய் சேதுபதி இருப்பார் என தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் அறிவிக்கப்பட்டது. புரோ கபடி லீக் தன் ஆறாவது சீசனில் கால் வைத்துள்ளது. அதை தமிழ்நாட்டில் பிரபலமாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரபலம் தூதராக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.


இந்த ஆண்டு தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தூதராகி உள்ளார். இவருக்கு சிறு குழந்தைகள், பெண்கள், வயதானோர், நகரம், கிராமம் என பல தரப்பிலும் ரசிகர்கள் உள்ளதால் இவரை வைத்து புரோ கபடியை தமிழக வீடுகளில் பிரபலமாக்கும் முயற்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.



தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியும் பங்கேற்றார். அவர் பேசுகையில், "கபடிக்கு தமிழ்நாட்டில் ஒரு தனி வரலாறு உண்டு. நம் சொந்த விளையாட்டான கபடி இன்று பெரிய உயரத்துக்கு சென்றுள்ளது. இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை அடைகிறேன்" என தெரிவித்தார்.