தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன் பலி
Plus 2 student dead: ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு பிளஸ் 2 மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மோகனன் தெருவை சேர்ந்த ஆப்பிள் ஸ்கூல் உரிமையாளர் கணேஷ் (எ) ஆப்பிள் கணேஷ். அவருக்கு திருமுருகன், கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் திருமுருகன் என்பவர் தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24 ஆம் ஆண்டு தேதி நண்பர்களுடன் ஆரணி டவுன் காந்தி ரோட்டில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற ஹோட்டலில் நண்பர்களுடன் அசைவ உணவு சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.
மேலும் அன்று இரவு முழுவதும் வயிற்று வலி வாந்தி ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளான். மறுநாள் காலையில் வீட்டின் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளான். ஆனால் வயிற்று வலி வாந்தி தொடர்ந்து தொந்தரவு ஏற்பட்டதால் நாளடைவில் சோர்வடைந்துள்ளார்.
மேலும் படிக்க | ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 17 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை
இந்நிலையில் கடந்த 29ம் தேதி காலையில் திடீரென வயிற்று வலி, வயிற்று போக்கு அதிகளவில் ஏற்பட்டதால் மீண்டும் தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். இதனால் உடனடியாக ஸ்கேன் எடுக்க தனியார் கிளினிக்கின் மருத்துவர் மம்தா என்பவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதனால் ஆரணியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளார். இதில் வயிற்றில் உணவு விஷமானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனார். செல்லும் வழியிலேயே மாணவன் திருமுருகன் பரிதாபமாக உயிரழந்தார்.
பின்னர் மாணவனின் சடலத்தை உடனடியாக ஆரணிக்கு கொண்டு வந்து மறுநாள் காலையில் உறவினர்கள் முன்னிலையில் இடுகாட்டில் எரித்து அடக்கம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று இந்து முன்னனி கட்சி கோட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இறந்த மாணவனின் தந்தை கணேஷ்னுடன் ஆரணி நகர காவல்நிலையத்திற்கு வந்து, என் மகன் சாவிற்கு காரணமான 5 ஸ்டார் எலிட் என்ற ஹோட்டல் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகன் இறந்த பின்பு உடனடியாக அடக்கம் செய்ய அதே பகுதியை சேர்ந்த திமுக முக்கிய புள்ளிகள் என்னை நிர்பந்தம் செய்ததால் என்னால் புகார் அளிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி காலையில் திடிரென வயிற்று வலி வயிற்று போக்கு அதிகளவில் ஏற்பட்டதால் மீண்டும் தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளான். இதனால் உடனடியாக ஸ்கேன் எடுக்க தனியார் கிளினிக்கின் மருத்துவர் மம்தா என்பவர் பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஆரணியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளார். இதில் வயிற்றில் உணவு விஷமானது தெரிய வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் திருமுருகன் பரிதாபமாக உயிரழந்தார்.
தற்போது என் மகன் சாவிற்கு தந்தூரி சிக்கன் சாப்பிட்டு உயிர் இழக்க நேரிட போவதாக நண்பர்களுடன் இன்ஸ்ராக்டாமில் தன் மகன் உரையாடல் நடத்தியுள்ள வீடியோ உள்ளதாகவும் என் மகன் இறந்த நாளில் என்னால் எந்த முடிவும் எடுக்காத மனநிலையில் இருந்ததாகவும் இதனால் தற்போது புகார் அளித்துள்ளேன்’ என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆரணியில் ஏற்கனவே 6 மாதம் முன்பு சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். 5 ஸ்டார் எலிட் என்ற ஓட்டல் நிறுவனம் திமுக முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஏ.அன்சர்பாஷாவுக்கு சொந்தமானது.
மேலும் படிக்க | சென்னையில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்?
உடனடியாக அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பினர். மேலும் இது குறித்து கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஹோடல்களில் இதுமாதிரியான உணவுகளை உட்கொண்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR