சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 5,114 மாணவா்கள்  தமிழ் முதல் தாள் தேர்வை நேற்று எழுதினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கி வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும். வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும்.


அந்தவகையில் சென்னை மாநகராட்சி கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மொத்தம் 5,114 பேர் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் முதல்தாள் தேர்வை எழுதினர். மொத்தம் 15 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. 


தேர்வையொட்டி, மாநகராட்சி நீர்வாகம் சார்பில் தேர்வு மையத்துக்கான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.