ஒகி நிவாரண நிதி: தமிழகத்திற்கு ரூ.280 கோடி அறிவிப்பு!
புயலில் இறந்தவர்களின் உறவினருக்கு ரூ.2 லட்சமும், பாதிக்கப்பட்டவர் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்
முன்னதாக இன்று காலை, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு வந்தார்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.325 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவி்த்துள்ளார்.
முன்னதாக இன்று காலை, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு வந்தார்.
கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக வந்திறங்கினார் மோடி. அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
இதன் பின்னர், தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கினர். அப்போது தமிழக அரசு சார்பில் ஒகி புயல் நிவாரண நிதியாக ரூ.4047 கோடி கோரி, பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.325 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த தொகையில் ரூ.280 கோடி தமிழகத்திற்கும், ரூ.76 கோடி கேரளாவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.1.5 லட்சம் மதீப்பீட்டிலான சுமார் 1400 வீடுகள் உடனடியாக கட்டியமைக்க மத்திய அரசு துணை நிற்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புயலில் இறந்தவர்களின் உறவினருக்கு ரூ.2 லட்சமும், பாதிக்கப்பட்டவர் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.