திருக்குறளை மட்டும் சொல்லி மக்களை பிரதமர் ஏமாற்றுகிறார் - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாமல் பிரதமர் திருக்குறளை மட்டும் மேற்கோள் காட்டுவது மக்களை ஏமாற்றக்கூடிய வேலை என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக ஜனநாயகத்தின் குரல்வளையை ஜனநாயகத்தின் வழிமுறைகளிலேயே நெறிக்க முயல்கிறதா ஒன்றிய அரசு? மற்றும் புதிய குற்றவியல் சட்டத் திருத்தங்கள்: காவிமயமாகிறதா நீதி பரிபாலன முறை? என்பது குறித்து கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் கூறுகையில்,"ஜனநாயகத்தில் நடக்கும் தவறுகளை ஜனநாயகத்தின் மூலமாக தான் அதனை சரி செய்ய வேண்டும். மக்களுக்காக தான் சட்டம் உள்ளது. அதனை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். மக்களுக்காக தேவைப்படும் இடத்தில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது.
சனாதனத்தை பின்பற்றுவோர்கள் மட்டுமே இந்துக்கள் அல்ல. சனாதன தர்மம் வர்ணாசன தர்மத்தை ஆதரிக்கிறதா என்பது தான் கேள்விக்குறியாக தற்போது உள்ளது. ஆனால் அதற்கான பதில் யாரிடத்தில் இருந்தும் வரவில்லை.
இந்தியா என்பது தான் உலகம் முழுவதும் அறிந்த பெயராக இருக்கிறது. ஆனால் பாரதியார் எழுதிய பாடல்களில் இந்தியா மற்றும் பாரத என்ற வார்த்தைகளை பயன்படுத்தி நாட்டை பற்றிய பாடல்களை பாடியிருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டங்களில் இந்தியா என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜக எதிராக கூட்டணி இந்தியா இன்று பெயரை பயன்படுத்தியதால் என்னவோ தற்போது பாரத் என்று ஒன்றிய அரசு அழைக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தலில் பல குழப்பங்கள் ஏற்படும். சில சட்டமன்றங்கள் கலைக்கப்படுகின்ற போது ஐந்து வருடங்கள் முழுமையாக அவர்களின் ஆட்சி காலம் நிறைவேற்றப்படாது. இந்தி மொழியை பொறுத்தவரை அது நமது இந்தியாவின் மொழியாக உள்ளது. இந்தி மொழிக்கு யாரும் எதிரியாக இல்லை, ஆனால் இந்தி மொழியை அனைவரிடத்திலும் திணிக்கக் கூடாது.
மேலும் படிக்க | இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்-ஸ்டாலின்
யுனெஸ்கோவில் எட்டு தகுதிகள் இருக்கிற ஒரே மொழி தமிழ் மொழியாக இருக்கிறது. ஆனால் அதற்காக இந்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. பிரதமர் ஒவ்வொரு கூட்டத்திலும் திருக்குறளை கஷ்டப்பட்டு பேசி அதன் எடுத்துக்காட்டை கூறுகிறார். ஆனால் தமிழ் மொழிக்காகவும், வளர்ச்சிக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யாமல் பிரதமர் திருக்குறளை மட்டும் மேற்கோள்காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார்.. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தால் பெரும்பான்மையான மக்கள் பேசக் கூடியதாக கூறி வரும் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்" என்றார்.
அடுத்தடுத்து சர்ச்சைகள்
சமீப காலமாக அரசியல் தளத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல், சனாதன தர்மம், பாரத் போன்றவை அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவலை அடுத்து இந்த பொது விவாதத்தில் உள்ளது.
அதேபோன்று, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தமுஎகச என்ற இடதுசாரி அமைப்பு ஏற்பாடு செய்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசி, அந்த நோய்களை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். அதாவது, அந்த நோய்களை தடுப்பது மட்டுமின்றி ஒழிப்பது தான் சரியாக இருக்கும், அதேபோல் தான் சனாதன தர்மமும் என பேசியிருந்தார். இது பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடம் இருந்து பெரும் எதிர்ப்பை பெற்றது. தேசிய அளவில் உதயநிதி பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நடைபெற்ற முடிந்த ஜி-20 மாநாடு சார்ந்த அழைப்பிதழில் நாட்டின் பெயரை இந்தியா என குறிப்பிடுவதற்கு பதில் பாரத் என்றே மத்திய அரசு தரப்பில் குறிப்பிட்டிருந்தனர். இது சர்ச்சையை கிளப்பியது. அதன் உச்சமாக, நேற்று நடைபெற்ற மாநாட்டில், பிரதமர் மோடியின் முன் இருந்த நாட்டின் பெயரை குறிப்பிடும், பெயர் பலகையிலும் இந்தியாவிற்கு பதில் பாரத் என்றே குறிப்பிட்டிருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ