தக்காளி ரசம் முதல் மலபார் இரால் வரை, களைகட்டிய மோடி - ஜின்பிங் டின்னர்
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவருக்கும் இரவு விருந்தில் தென்னிந்திய உணவு விருந்து வழங்கப்பட்டது.
சென்னை: பெய்ஜிங்கிலிருந்து நேற்று மதியம் சென்னை வந்த சீன அதிபரும், டெல்லியிலிருந்து நேற்று பகல் 12 மணியளவில் சென்னை வந்த பிரதமர் மோடியும் மகாபலிபுரத்தில் (Mahabalipuram) சந்தித்து கொண்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) வரலாற்று சிறப்பு மிக்க முதல் நாள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நிறைவடைந்தது. இந்த சந்திப்பிற்கு பின்னர் இரவு உணவை முடித்துக்கொண்ட தலைவர்கள் தங்கள் விடுதிக்கு திரும்பினர். இரவு விருந்தில் தலைவருக்கு தென்னிந்திய உணவு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்து பட்டியல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
தென்னிந்திய உணவு விருந்து பட்டியலில் தக்காலி ராசம், மலபார் லோப்ஸ்டர், கோரே கெம்பு, மதன் உலாரதியாடு, கருவேபில்லை மீன் வருவல், தஞ்சாவூர் கோலி கறி, யெராச்சி கெட்டி கோழம்பு, பீட்ரூட் இஞ்சி சாப், சுண்டைக்காய் குழம்பு, ஆரிச்சா சம்பார், மாம்சம் பிரியாணி, கவனார்சி அல்வா, முக்காணி ஐஸ்கிரீம், மசாலா தேநீர் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
உலக புகழ்பெற்ற மகாபலிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது இன்பார்மல் உச்சிமாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவாரத்தை நடத்தினர். இந்த பேச்சுவாரத்தையில் பயங்கரவாதம், இருநாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவாதம் சுமார் 10 மணி வரை (ஆறு மணி நேரம்) நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். ஜின்பிங் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நேற்று இரவு தங்கினார். அவர் சென்றபின் பிரதமர் மோடி, கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு ஓய்வெடுக்கச் சென்றார். இன்று மீண்டும் இருவரும் சந்திக்க உள்ளனர்.
மேலும் மாமல்லபுரம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., “மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
யுனெஸ்கோவின் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது.
அதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்தோம். ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள்.
இந்த நினைவிடத்தில், தர்மராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜூனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரவுபதி ரதம் ஆகியவை உள்ளன.
வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது. அலைவாய்க் கோவிலில் இருந்து மேலும் சில படங்கள் இதோ” என பதிவிட்டுள்ளார்.