PM Modi: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி... சென்னை டூ நீலகிரி வரை - பக்கா பிளானில் திடீர் ட்விஸ்ட்!
PM Modi Tamil Nadu Visit: பிரதமர் மோடி ஏப். 8, 9 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, நீலகிரியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள நிலையில், அவரின் பயணம் குறித்த முழு தகவலையும் இங்கு காணலாம்.
PM Modi Tamil Nadu Visit: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள நாளை (ஏப். 8) சென்னை வருகிறார். சென்னை மட்டுமின்றி, ஏப். 9ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் தெப்பக்காட்டிற்கும் பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இதனால், சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செயல்படுத்தப்பட உள்ளதாக காவல்ரகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் இரண்டு நாள் தமிழகம் பயணம் குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
சென்னைக்கு முன் ஹைதராபாத்
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப். 8) சென்னை வருவதற்கு முன்னதாக, ஹைதராபாத்தில் சுமார் ரூ. 11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார். அங்கு மதியம் 1.35 மணிக்கு பெகும்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை வருகிறார்.
புதிய விமான முனையம் திறப்பு
மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்துவைக்கிறார். இந்த நிகழ்வு மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. திறப்பு விழாவுக்கு பின், விமான நிலையத்தில் இருந்து MI-17 ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.25 மணிக்கு புறப்பட்டு, சென்னை ஐஎன்எஸ் அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு மதியம் 3.55 மணிக்கு வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னை வரும் மோடி! கருப்பு கொடி மட்டும் இல்லை! இதை செய்தாலும் தண்டனை!
ரயில் சேவைகளை தொடங்கிவைக்கிறார்
அடையார் ஐஎன்எஸ் தளத்தில் இருந்து உடனே காரில் புறப்பட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சுமார் மாலை 4 மணியளவில் வந்தடைவார். அங்கு மாலை 4 மணி முதல் 4. 20 மணி வரை நடக்கும் விழாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.
விவேகானந்தர் இல்லம்
அதன்பின்னர், அவர் மாலை 4.25 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, 4.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள விவகானந்தர் இல்லத்திற்கு வருகை தருகிறார். அங்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் 125ஆவது ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்கிறார்.
மெரினாவுக்கு தடை
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் 125ஆவது ஆண்டுவிழா நிகழ்வு, முதலில் மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற திட்டமிடப்பட்டது. பின்னர், அந்நிகழ்வு மெரினா அருகே உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு மாற்றியமகைப்பட்டதால், தற்போது போலீசார் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதித்துள்ளனர். எனவே, நாளை முழுவதும் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம்
விவேகானந்தர் இல்லத்தில் நிகழ்வு மாலை 4.45 மணி முதல் 5.45 மணிவரை நடைபெறுகிறது. விழா நிறைவுபெற்ற பின், பிரதமர் காரில் அடையார் ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மாலை 6.20 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். தொடர்ந்து, சென்னை பல்லாவரம் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்வு, இரவு 7.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சென்னையில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.
இரவு மைசூர் திரும்புகிறார்
இதையடுத்து, இரவு 7.35 மணிக்கு நிகழ்வு நடைபெறும் இடத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு சென்னை விமானம் நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து விமானப்படை தனிவிமானம் மூலம் கர்நாடகாவின் மைசூரு விமான நிலையத்திற்கு இரவு 8.40 மணிக்கு சென்றடைவார்.
பொம்மன் - பெல்லியுடன் சந்திப்பு
பின்னர், ஏப். 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கு வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 9.35 மணிக்கு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆஸ்கார் விருது வென்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் தோன்றிய ரகு, பொம்மி என்ற இரு யானைகளை பார்வையிடுகிறார். ரகு, பொம்மி ஆகிய யானைகளை கவனித்துக்கொண்ட பெம்மன் - பெல்லி தம்பதிகளை சந்தித்து கௌரவப்படுத்த உள்ளார்.
யானைகளுக்கு உணவளிக்கிறார்
பின்னர் தேசிய புலிகள் காப்பகத்தில் சிறப்பாக பணியாற்றிய கள இயக்குனர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மூத்த மூன்று யானை பாகன்களை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து யானைகளுக்கு வழங்கப்படும் உணவை பார்வையிட்டு, இரண்டு யானைகளுக்கும் உணவளிக்கிறார்.
மீண்டும் மைசூர்
தொடர்ந்து T-23 புலியை பிடித்ததில் திறமையாக செயல்பட்ட மூன்று வேட்டை தடுப்பு காவலர்களை சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து மசனகுடிக்கு சாலைமார்க்கமாக வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்கிறார்.
மேலும் படிக்க | தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்! இவ்வளவு கம்மி விலையிலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ