அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்றிலிருந்து (ஜனவரி 19) 21ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு செல்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடியின் தமிழக விசிட்-இன்று நடந்தது என்ன? 


பிரதமர் மோடி, இன்று மாலை 4:50 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரார்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பிறகு, நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டியின் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். “அழகிய தமிழ் மொழி கலாச்சாரம் உணவு ஆகியன உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்கிறது. தமிழர்களின் விருந்தோம்பல் உங்கள் இதயங்களை கொள்ளைகொல்லும். இந்த விருந்தோம்பலை பார்க்கும்போது சொந்த ஊருக்கு வந்ததுபோல் இருக்கிறது” என்று கூறினார். 


மேலும் படிக்க | ரமணா படப் பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு


ஜனவரி-20- ப்ளான் என்ன? 


>கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை விமான நிலையம் செல்கிறார்.


>காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.


>திருச்சி விமான நிலையதில் இருந்து கார்க் மூலம் சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் செல்கிறார்.


>காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.


>அங்கிருந்து கார் மூலம் மீண்டும் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.


>திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்கிறார்.


>மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.


>பிற்பகல் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் பிரதமர் கடலில் நீராடுகிறார்.


>பிற்பகல் 2.10 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.


>அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்திற்கு இரவு தங்குகிறார்.


ஜனவரி 21 திட்டம்: 


>காலை 10.05 மணிக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுகிறார்.


>பின்னர் காரில் சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார்.


>காலை 10.30 மணிக்கு கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.


>அதன்பிறகு ராமர் பாலம் உள்ள இடத்தை பார்வையிடுகிறார்.


>ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீரை எடுத்துக்கொண்டு மதுரை விமான நிலையம் செல்கிறார்.


>மதுரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 


>அடுத்த நாள் (ஜனவரி 22) அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார்.


லோக்சபா தேர்தல்: பாஜகவின் 'மிஷன் சவுத்' திட்டம் 


லோக்சபா தேர்தல் மற்றும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வரிசையில் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டிக்கு நாளை வருகிறார். முன்னதாக, பிரதமர் மோடி ஜனவரி 16-17 ஆகிய இரண்டு நாட்கள் ஆந்திரா மற்றும் கேரளாவுக்குச் சென்றார். பிரதமர் மோடி தொடர்ந்து தென் மாநிலங்களுக்கு பயணம் செய்வது பாஜகவின் 'மிஷன் சவுத்' திட்டத்தின் ஒரு அங்கம் என்று கூறப்படுகிறது.


தென் இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி


ஜனவரி 2 ஆம் தேதி: பிரதமர் மோடி தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


ஜனவரி 3 ஆம் தேதி: லட்சத்தீவு மற்றும் கேரளாவுக்கு சென்றார். 


ஜனவரி 16 ஆம் தேதி: ஆந்திரப் பிரதேச சுற்றுப்பயணம் சென்றார்.


ஜனவரி 17 ஆம் தேதி: கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டார். 


ஜனவரி 19 ஆம் தேதி: பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார்.


மேலும் படிக்க | PM Modi Visit: சென்னையில் பிரதமர் மோடி... கேலோ இந்தியா போட்டிகள் தொடக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ