இன்று ரூ,40,000 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை - மதுரை இடையே தேஜஸ் ரயிலின் சேவை, மதுரை ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை என மொத்தம் ரூ,40,000 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார்.


திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை வரவேற்க முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தர்ராஜன் உட்பட பலர் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். 


கடந்த மாதம் பிரதமர் மோடி மதுரை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.