சென்னை வந்தடைந்தார் மோடி - உற்சாக வரவேற்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்து உள்ள மாமல்ல்புரத்தில் இன்று தொடங்குகிறது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் வருகை தந்திருப்பதால் அவர்களுக்கான அறை ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை எந்த சொதப்பலும் இல்லாமல் செய்திருக்கிறது அரசு. தமிழக அரசின் ஏற்பாடுகளை பார்த்த சர்வதேச வீரர்கள் பலரும் இதுபோல் ஏற்பாட்டினை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை என புகழாரம் சூட்டுகின்றனர். ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்கவிழா இன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கவிருக்கிறது.
இதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என கூறப்பட்டது. அதன்படி, சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,டி.ஆர்.பாலு,தயாநிதி மாறன் ரவி பச்சமுத்து, கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,தலைமை செயலாளர் இறையன்பு,ஏ.சி.சண்முகம்,பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன்,வானதி சீனிவாசன் மற்றும் பாஜக செயர்குழு மதுவந்தி உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் - வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட்
முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடக்கும் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி ஆகிய இடங்களை நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது செஸ் வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர், தானும் செஸ் விளையாடி மகிழ்ந்தார் என்பத் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ