தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி கோவையில் மலர் அஞ்சலி!
கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி கோவையில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவைக்கு இன்று மாலை பிரதமர் மோடி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தருகிறார். இதன் காரணமாக மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாலை 5.45 மணிக்கு பிரதமர் பங்கு கொள்ளக்கூடிய ரோட் ஷோவிற்க்கான ஏற்பாடுகளை பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். சாய்பாபா கோவில் சந்திப்பு பகுதியில் தொடங்கும் நிகழ்ச்சியானது ஆர்.எஸ் புரம் தபால் நிலையம் 2.5கீ.மி தூரம் வரைக்கும் நடைபெறுகிறது. சாலைகளில் இருபுறமும் பிரதமரை வரவேற்க தடுப்புகள் அமைத்து பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மாலை 5.30 மணிக்கு விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்திலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம் வரைக்கும் சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் L. முருகன், பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் ஆர்.எஸ் புரம் தபால் நிலையம் எதிரில் உள்ள மலரஞ்சலி செலுத்தும் இடத்திற்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோட் சோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்ததாக தெரிவித்தார்.
எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு அவர்களுடன் இணக்கமாக இருந்து இந்த பேரணி நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருவதாக தெரிவித்தார். கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த இருப்பதாக கூறினார். இதற்கான முன் அனுமதியும் பெறப்பட்டு உள்ளது என்று கூறியவர், தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களில் இஸ்லாமியர்களும் அடக்கம், இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இரண்டு நாட்களில் முடிவு தெரிவிக்கப்படும் என்றார். தமிழிசை ராஜினாமா குறித்து கேட்டதற்கு, தற்பொழுது தான் செய்திகள் வந்து உள்ளதாகவும் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! இந்த விஷயங்களில் கவனம் தேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ