Lok Sabha Election Date: தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதிநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறுமென நேற்று மதியம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் தேதியை அறிவித்தது மட்டுமல்லாமல் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிடதகும் படியாக பணம், பொருட்கள் மற்றும் மது விநியோகம் செய்யப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் இரவு நேரங்களில் வங்கி வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லக்கூடாது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முழுவதுமாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து பணபரிவர்த்தனைகளை தடைசெய்ய தீவிர கண்காணிப்புகளுடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?
இதன் ஒருபகுதியாக வடசென்னை ஆர்கே நகர் பகுதியில் அதிகாலை முதலில் இருந்தே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்கூட்டர் டைப் இரு சக்கர வாகனங்கள், கார்கள் என பணம் கொண்டு செல்ல ஏதுவாக கருதப்படூம் இவ்வகையான வாகனங்களை மடக்கு தகுந்த ஆவணங்கள் உள்ளதா பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்த சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பழனியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது. இதே போல இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மூன்று பறக்கும் படைகள் அமைக்கபட்டு கண்காணிக்கபடுகிறது. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் தேர்தல் அதிகாரி தாசில்தார் சக்திவேலன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகளால் வாகனங்களை தடுத்து நிறுத்தப்பட்டு வீடியோ பதிவுடன் கூடிய தீவிரவாகன சோதனை நடைபெற்றது. இதில் துணை தாசில்தார் சஞ்சய் காந்தி ,நந்தகோபால் ,காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக ஆந்திர எல்லை பகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை காவல் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையை தீவிர படுத்தியுள்ளனர். ஆந்திர - தமிழக எல்லைகளைக் கொண்ட வேலூர் மாவட்டத்தில் சைனகுண்டா, பரதராமி பொன்னை, காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை உள்ளிட்ட 6 மாநில எல்லை சோதனை சாவடிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கூடுதல் சிசிடிவிகளை பொருத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு - ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புகள் குறித்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர போலீசார் கடந்த 5.03.2024 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ