சென்னை: தமிழகம் முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதுடெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) திறந்து வைத்தார். மத்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர்களும், சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில அமைச்சர்களும், மாநில ஆளுநர் ஆர்.என். ரவியும் கலந்துக் கொண்டனர்.



செம்மொழி ஆய்வு மையத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தேவை என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.


செம்மொழி ஆய்வு மையத்தின் வளாகத்தை திறந்த வைத்த வைத்த பிரதமருக்கு நன்றி கூறிய முதலமைச்சர், தனது தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியை நினைவுகூர்ந்தார்.



தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியுடன் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையைத் தொடங்கினார். முதலில் மாநில ஆளுநருக்கு நன்றி தெரிவித்த பிரதமர்,


அதன்பிறகு தமிழக முதல்வர், அமைச்சர்கள், தமிழக மக்களுக்கும் வணக்கம் தெரிவித்த பிரதமர், செந்தமிழின் சிறப்புகளையும் பட்டியலிட்டார்.


ALSO READ | CICT: தொல்காப்பியம் இந்தி மொழியில்! கன்னடத்தில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு!


வரவிருக்கும் ஆண்டுகளில், தரமான மற்றும் மலிவு விலையில் மருத்துவ சேவைக்கான இடமாக இந்தியா இருக்கும் என்று கருதுவதாக பிரதமர் தெரிவித்தார்.


மருத்துவச் சுற்றுலாவுக்கான மையமாகத் தேவையான அனைத்தையும் இந்தியா கொண்டுள்ளது என்று கூறிய பிரதமர், டெலிமெடிசினின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.


2014-ல் நம் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன என்று தெரிவித்த பிரதமர், கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 596ஆக உயர்ந்துவிட்டதடி சுட்டிக்காட்டினார்.


2014 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன, ஆனால் தற்போது, அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


ALSO READ | தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்


​​விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்தார்.


சுமார் 4,000 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான (Medical Colleges) செலவில், சுமார் ரூ.2,145 கோடியை மத்திய அரசும், மீதித் தொகையை தமிழக அரசும் வழங்கியுள்ளன.


1,450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், 'தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல்' என்ற மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன.


இத்திட்டத்தின் கீழ், அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி (Medical Colleges) இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுகின்றன.


ALSO READ | தொற்றின் எதிரொலி: தனியார் நிறுவன ஊழியர்கள் WFH செய்ய அரசு உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR