சென்னை: நேற்று இரவு கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி அவர்கள், இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றினார். சுமார் அரைமணிநேரம் சுத்தப்படுத்தி உள்ளார். அவர் சேகரித்த குப்பைகளை அங்கிருந்த ஓட்டல் ஊழியரிடம் தந்துள்ளார். நாட்டின் பிரதமர் காலில் செருப்புக்கூட போடாமல் பொது இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றிய சம்பவம் அனைவருக்கும் பெரிய உதாரணமாக அமைத்துள்ளது. நாட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது அனைவரின் கடமை என பிரதமர் மோடி உணர்த்தி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாமல்லபுரம் கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றியதைக் குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில், இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு கடற்கரையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குப்பைகளை அகற்றினேன். எனது ‘குப்பை சேகரிப்பை’ ஹோட்டல் ஊழியர்களில் ஒருவரான ஜெயராஜிடம் ஒப்படைத்தாகவும் கூறியுள்ளார்.


பொது இடங்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம்! ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வோம்.


இவ்வாறு ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.


 



உலக புகழ்பெற்ற மகாபலிபுரத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வந்த சீன அதிபரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இரண்டாவது இன்பார்மல் உச்சிமாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவாரத்தை நடத்தினர். இந்த பேச்சுவாரத்தையில் பயங்கரவாதம், இருநாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதம் சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்றது அதன்பின்னர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். ஜின்பிங் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நேற்று இரவு தங்கினார். அவர் சென்றபின் பிரதமர் மோடி, கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு ஓய்வெடுக்கச் சென்றார். 


உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று (சனிக்கிழமை) தமிழகத்தின் சென்னையில் மீண்டும் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் 28 வரை வுஹானில் நடைபெற்ற தொடக்க உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.