பிரதமரின் சென்னை வருகை - விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி வருவதால் சென்னையில் காவல் துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலம் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளார். 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அவர் வரவிருப்பதால் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர 28.07.2022 மற்றும் 29.07.2022 ஆகிய 2 நாட்கள், ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணம் கடந்த மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் எடுத்து வரப்பட்ட இந்த ஜோதி தமிழ்நாட்டுக்குள் கோவை மாநகரத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கோவையில் இருந்து இந்த ஜோதி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு இன்று காலை வந்தது. கிராண்ட் மாஸ்டர் நிலோபர்தாஸ் ஊர்வலமாக எடுத்து வந்தார். மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா சங்கேதன், தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் குமரி மாவட்ட செஸ் விளையாட்டு கழகம் சார்பில் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜோதி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றது.
மேலும் படிக்க | மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க அன்பில் மகேஷ் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்!
அங்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பிறகு ஜோதி திருவள்ளுவர் சிலை வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜோதியை வீரர் மற்றும் வீராங்கனைகள் சிலையை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தஞ்சாவூருக்கு எடுத்து செல்லப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ