புத்தாண்டில் மகிழ்ச்சி பெருகட்டும், வாழ்க்கையில் வசந்தம் வீசட்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிடுகையில்.,  புத்தாயிரமாண்டின் மூன்றாவது பத்தாண்டு பிறப்பைக் கொண்டாடும்  சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும். ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.


2019-ஆம் ஆண்டு நமக்கு பல வகைகளில் பின்னடைவைத் தந்த ஆண்டு தான். ஆனாலும், நமது  வலிமை குறையவில்லை. விழுந்த வேகத்தில் எழுந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். நமது வலிமையை தமிழகத்துக்கு நிரூபித்திருக்கிறோம். நமது இந்த பயணம் நமது நிலைகுலையாத தன்மையை நிரூபித்திருக்கிறது. நமது பயணம் நிச்சயம் நாம் நினைத்தவாறே வெற்றி இலக்கை எட்டும். 


2020-ஆம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமான ஆண்டு. புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டில் நாம் வெற்றிகளை குவித்தோம். இரண்டாவது பத்தாண்டு சில சறுக்கல்களைக் கொடுத்தது. இனிவரும் மூன்றாவது பத்தாண்டில் நமது கடுமையான உழைப்பு நமக்கு வெற்றிகளை குவிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நமக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்விலும் வசந்தம் வீச வைக்கும்.


ஆங்கிலப் புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அமைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை  புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.