தமிழக அரசு (TN Government) , அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், சீர் மரபினருக்கு 7 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 சதவீதமும்  இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுமட்டுமின்றி இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும். எனஅரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு நன்றி தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Dr.Anbumani Ramadoss) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை  நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (M.K.Stalin) அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!



ALSO READ | ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா


கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் முன்னேற்றத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள்  42 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தின் பயன் இது.  சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா வழி நடப்பதில் பெருமிதம் கொள்வோம்!


ALSO READ | தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: எடப்பாடி பழனிச்சாமி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR