’தேசநலன் கருதி’ பாமக எடுத்த கூட்டணி முடிவு - பாஜகவுடன் சேரப்போகிறது! அதிமுக ஏமாற்றம்
pmk set to alliance with bjp: பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என அக்கட்சி முடிவு செய்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசன் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என பாமக முடிவெடுத்திருக்கிறது. தைலாபுரம் கூட்டத்துக்குப் பிறகு பேசிய பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், " பாமக இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாமகவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேச நலன் கருதி இந்த முடிவை பாமக எடுத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கோவை: பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடுஷோ! அப்போ நடந்த சுவாரஸ்ய சம்பவம்
அதிமுக ஏமாற்றம்
அதிமுகவுடன் கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் இப்படியான முடிவை எடுத்திருக்கிறது. இது அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. பாமக தங்கள் கூட்டணியில் இடம்பெறும் என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை பாமக எம்எல்ஏ அருள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதனால் பாமக, அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாக பார்க்கப்பட்டது.
பாமக யு டர்ன்
ஆனால், அடுத்த நாளான திங்கட்கிழமை பாஜக கூட்டணியில் செல்லலாம் என்ற முடிவை பாமக எடுத்திருக்கிறது. இதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தால் அன்புமணி ராமதாஸ் மீது இருக்கும் சிபிஐ வழக்கு வேகமெடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் இப்போதைக்கு லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டு, தேர்தல் ரிசல்டை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவை எடுத்துக் கொள்ளலாம் என அன்புமணி ராமதாஸ் நினைக்கிறாராம். தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் மட்டுமே பாமக இந்த முடிவை எடுத்திருக்கிறது. பாமகவின் இந்த முடிவு கூட்டணிக்காக காத்திருந்த அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ