Vairamuthu lauds MK Stalin: பெரியாரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின் - வைரமுத்து
தமிழ் மொழியில் அர்ச்சனை என்ற சட்டம் தமிழ் மொழிக்கு கிடைத்த அதிகாரம். அதே போல பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டினார்
இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து தேசிய கொடியை ஏற்றி மரியாதையை செலுத்தினர்.
அதன்பின் இவ்விழாவில் பேசிய வைரமுத்து, "இந்த நாட்டில் மதங்கள் கொண்டாடப்படுகிறது ஆனால் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். இரண்டு இந்தியர்கள் சந்தித்துக்கொண்டால் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் இல்லை" என்றார். மேலும், இந்தியா வளரவில்லை என்று கூறினால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனக் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தியாகம் இல்லாமல் சுதந்திரம் இல்லை, தியாகத்திற்கான விலையை நெஞ்சில் எழுதிக்கொள்வது நாம் செய்ய வேண்டிய கடமை. வரலாற்றில் குறித்து வைத்துகொள்ள வேண்டிய இரண்டு சாதனைகள் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. கடவுள் படைத்த மொழியில் அவருக்கு அர்ச்சனை, தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டாரா எனவும் கேள்வி எழுப்பிய அவர், முதலில் நமக்கு அர்ச்சனை புரியட்டும்" என்றவர்.
"தமிழ் மொழியில் அர்ச்சனை என்ற சட்டம் தமிழ் மொழிக்கு கிடைத்த அதிகாரம். அதே போல பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய உரிமை. இந்த இரு சட்டங்களையும் நடைமுறைபடுத்தி உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் அன்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்" எனக் கூறினார்.
ALSO READ: 75-ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாக கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR