கடலூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுத்தம் செய்யும் பணிக்காக பாதாள சாக்கடைக்குள் ஒருவர் இறங்கியுள்ளார். அவருக்கு உதவி செய்வதற்காக இருவர் மேலே நின்றுள்ளனர். பின்னர் சில நிமிடங்களில் பாதாள சாக்கடைக்குள் வெளியான விஷவாயு தாக்கி, உள்ளே இருந்தவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைப் பார்த்த மற்ற இருவரும் அவரை காப்பாற்றுவதற்காக பாதாள சாக்கடைக்குள் இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களும் விஷ வாயுவினால் தாக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளனர். சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் மூவரும் உள்ளே மயங்கிக் கிடப்பதை பார்த்த சிலர், உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.


தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பாதாள சாக்கடைக்குள் இறங்கி மூவரையும் மேலே கொண்டு வந்தனர். ஆனால் அவர்களை சோதித்து பார்த்ததில், மூவரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.


முதல் கட்ட விசாரணையில் எந்த வித பாதுகாப்பு உபரகணங்களும் இல்லாமல், பாதாள சாக்கடைக்குள் இறங்கியதே அவர்களிடைய உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.