மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
POCSO Court Verdict: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
தஞ்சை: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம மெலட்டூர் அருகே ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்த 62 வயது நாகராஜன் என்ற குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. நாகராஜன், ஏரவாடியில் பலகாரக் கடை வைத்து நடத்தி வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு பலகாரம் வாங்குவதற்காக வந்த மாணவியிடம் செய்த சில்மிஷத்தால் 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் இந்த முதியவர். இவருடைய கடைக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் முறைகேடாக நடந்துக் கொண்டார் நாகராஜன். அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதையாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்ததும், நாகராஜனின் அடாவடித்தனம் பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். மகளின் நிலையைப் பார்த்த பெற்றோர், அதன் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மேலும் படிக்க | Crime News: 90 வயது மூதாட்டியைக் கற்பழித்த காமக் கொடூரன்!
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுந்தர்ராஜன் நாகராஜனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் தஞ்சை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ